Home One Line P2 “குடியுரிமை சட்டத் திருத்தத்தை மீட்டுக் கொள்ளும் எண்ணம் இல்லை!”- அமித் ஷா

“குடியுரிமை சட்டத் திருத்தத்தை மீட்டுக் கொள்ளும் எண்ணம் இல்லை!”- அமித் ஷா

691
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்து அதில் பலர் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இது தொடர்பான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்தை மீட்டுக் கொள்ளப்போவதில்லை என்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என்றும் இச்சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“சிறுபான்மை மக்களை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து  தவறான தகவல்களை பரப்பி வருகிறது. எதிர்க்கட்சிகளான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை இந்த சட்டத்தை எதிர்க்கின்றன. அவை குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக  தவறான தகவல்களை பரப்புகின்றன.” என்று அவர் கூறினார்.  

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அல்லாதவர்கள், மத அச்சுறுத்தல்களால், இந்த சட்டத்தின் மூலமாக அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

இதில் மத பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுத்தப்படுவதாகக் கூறி போராட்டங்கள் வெடித்துள்ளன.