Home One Line P1 மார்ச் தொடங்கி பினாங்கில் பணமில்லா பரிவர்த்தனைகள் தொடங்கும்!

மார்ச் தொடங்கி பினாங்கில் பணமில்லா பரிவர்த்தனைகள் தொடங்கும்!

1000
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு அரசாங்கம் இந்த மார்ச் மாதம் தொடங்கி, மாநிலம் முழுவதும் மின் பணப்பை (e-wallet) பரிவர்த்தனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் மார்ச் 14 வரை அமல்படுத்தப்பட்ட மத்திய அரசின் மின்பணத் திட்டத்திற்கு ஏற்ப இந்த முயற்சி இருப்பதாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ் கூறினார். இது மலேசியர்களிடையே பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.

நான் இந்த முயற்சியை முழுமையாக ஆதரிக்கிறேன். ஒவ்வொரு பினாங்கு மக்களும் பணமில்லா வாழ்க்கை முறையை வாழ ஊக்குவிக்க விரும்புகிறேன். “ என்று அவர் டச் அண்ட் கோ மின் பணப்பை தொடக்க நிகழ்ச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை கூறினார்.