Home One Line P1 “அடுத்த கல்வி அமைச்சர், முன்னாள் அம்னோ உறுப்பினர் அல்ல” – அன்வார் உறுதி

“அடுத்த கல்வி அமைச்சர், முன்னாள் அம்னோ உறுப்பினர் அல்ல” – அன்வார் உறுதி

594
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இடைக்காலக் கல்வி அமைச்சராக பிரதமர் துன் மகாதீரே பதவி வகிக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த கல்வி அமைச்சர் முன்னாள் அம்னோ உறுப்பினராக இருக்க மாட்டார் என பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன் ஏற்பாட்டில் செர்டாங்கில் நடைபெற்ற சிறந்த யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்வார் “அம்னோவிலிருந்து விலகி நம்பிக்கைக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளில் இணையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்பது நம்பிக்கைக் கூட்டணியின் கொள்கையாகும். எனவே முன்னாள் அம்னோ உறுப்பினர் ஒருவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்க மாட்டார்” என்று கூறினார்.

அம்னோ கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்று சில மாதங்களுக்கு முன்னர் பெர்சாத்து கட்சியில் இணைந்த முஸ்தாபா முகமட் கல்வி அமைச்சராக நியமிக்கப்படலாம் என ஆரூடங்கள் பரவி வரும் வேளையில் அன்வார் இப்ராகிம் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.