Home One Line P2 53-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குவியும் வாழ்த்துகள்!

53-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குவியும் வாழ்த்துகள்!

788
0
SHARE
Ad

சென்னை: இந்திய இசை உலகில் முக்கிய இடத்தினைப் பெற்று, உலகமெங்கிலும் புகழ் பெற்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் 53-வது பிறந்தநாள் இன்று திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதினைப் பெற்ற ஏ.ஆர். ரஹ்மான், உலகம் எங்கும் புகழ் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இரண்டு கிராமி விருது, ஒரு பாப்டா, ஒரு கோல்டன் குளோப், ஆறு தேசிய விருதுகள், மற்றும் 15 பிலிம்பேர் விருதுகள் என அவரின் சாதனைகள் பல.

#TamilSchoolmychoice

இதனிடையே, இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரஹ்மானுக்கு இசை உலகின் இரசிகர்களும், திரைப்பட கலைஞர்களும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

#HappyBirthdayARRahman என்கிற ஹேஷ்டேக் டுவிட்டரில் இந்தியா அளவில் இரண்டாவது இடத்தில் பிரபலமாகி வருகிறது.