Home One Line P1 ஜாகிர் நாயக்கை அவமதித்ததற்காக சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கெ.செந்திவேலு விசாரிக்கப்படுவார்!- காவல் துறை!

ஜாகிர் நாயக்கை அவமதித்ததற்காக சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கெ.செந்திவேலு விசாரிக்கப்படுவார்!- காவல் துறை!

1216
0
SHARE
Ad

சிரம்பான்: டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக அவமதிக்கத்தக்க பதிவினை தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதற்காக, சிரம்பான் நகராட்சி மன்ற உறுப்பினர் கெ. செந்திவேலு விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்று சிரம்பான் மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் சைட் இப்ராகிம் கூறினார்.

இது தொடர்பாக காவல் துறையினருக்கு ஐந்து புகார் அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முஸ்லிம்களின் உணர்வைத் தொடும் புகைப்படத்தையும் அவர் பதிவேற்றியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பதிவேற்றப்பட்டதை அவர் நீக்கி விட்டாலும் ஒரு சாதாரண நடைமுறைக்கு ஏற்ப,  மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும்என்று அவர் கூறினார்.

தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் பிரிவு 233  கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.