வாஷிங்டன்: ஈரானின் முக்கிய இராணுவத் தளபதியின் கொலைக்கு அந்நாடு பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்பட்டால், மிகப் பெரிய பொருளாதாரத் தடையையும், பெரும் பதிலடியையும் எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று ஞாயிற்றுக்கிழமை அச்சுறுத்தியுள்ளார்.
2015-இல் அணு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஈரான், தற்போது அந்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட இருப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, இந்த அச்சுறுத்தல்களை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அண்மையில், ஈரானின் முக்கிய இராணூவத் தளபதி காசிம் சுலைமணி கொல்லப்பட்டதை அடுத்து இந்த முடிவினை ஈரான் எடுத்துள்ளது.
“அவர்கள் ஏதாவது செய்ய நினைத்தால் பெரும் பதிலடி கிடைக்கும்” என்று டிரம்ப் கூறியுள்ளார்.