கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியின் புதுமையான நடவடிக்கைகளில், அமைச்சர்கள் 2019-ஆம் ஆண்டுக்கான அவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டு அறிக்கைகளை தயார் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அந்த மதிப்பீட்டு அட்டையில் அவர்களின் பணிகள் மற்றும் ஒவ்வொரு அமைச்சின் ஒட்டுமொத்த சாதனை பற்றிய மதிப்பீடு இருக்கும் என்று புத்ராஜெயாவைச் சேர்ந்த வட்டாரம் தெரிவித்ததாக மலேசியாகினி குறிப்பிட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டு அறிக்கைகள் நாளை புதன்கிழமை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகள் ஏற்கனவே தங்கள் அறிக்கைகளை சமூக ஊடக வலைத்தளங்கள் மற்றும் அமைச்சின் பக்கங்களில் பதிவிட்டுள்ளன. கடந்த டிசம்பர் 13-ஆம் தேதியன்று முதலாக கல்வி அமைச்சு இதனை வெளியிட்டது.
மஸ்லீயின் இடத்தினை பூர்த்தி செய்ய இருக்கும் நபர் குறித்தும் பிரதமர் நாளை அமைச்சரவையில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது, ஆனால், இரண்டு அல்லது மூன்று பதவிகளை உள்ளடக்கிய மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க பிரதமர் பல அமைச்சர்களை சந்தித்துள்ளதால், அது இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.