Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணியுடன் கைகோர்ப்பது வாரிசானின் உரிமைகளைப் பாதிக்காது!

நம்பிக்கைக் கூட்டணியுடன் கைகோர்ப்பது வாரிசானின் உரிமைகளைப் பாதிக்காது!

617
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: நம்பிக்கைக் கூட்டணியுடன் வாரிசான் கட்சி ஒன்றிணைந்து செயல்படுவதால், சபா மாநிலக் கட்சியான அது மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், போராடுவதற்கும் தடையாக இருக்காது என்று மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் ஷாபி அப்துல் தெரிவித்தார்.

நம்பிக்கைக் கூட்டணியில் இணையவில்லை என்றாலும், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் மாநில மற்றும் கூட்டாட்சி மட்டத்தில் நன்றாக இருப்பதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அந்த ஒத்துழைப்பின் மூலம், நாங்கள் (வாரிசான்) மத்திய அமைச்சரவையில் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அவர்களையும் (நம்பிக்கைக் கூட்டணி பிரதிநிதி) மாநில அமைச்சரவையில் நியமித்துள்ளோம்என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை இங்குள்ள கம்போங் சிம்பாங்கான் வாக்குப்பதிவு மையத்திற்கு வருகை தந்தபோது கூறினார்.

இதற்கிடையில், மாநிலத்தில் உள்ள மக்களின் பன்முகத்தன்மைக்கு ஏற்ப பல இன அடிப்படையில் சபா அரசு அமைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.