மலேசியாவில் அமைந்துள்ள டிஎம்ஒய் நிறுவனம் சார்பாக தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்தின் 2.0 படத்திற்காக இந்நிறுவனம் 12 கோடி ரூபாய் கடனாக தந்ததாகவும் , தற்போது அது வட்டியுடன் 23 கோடியே 70 இலட்சத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அந்த தொகையை திருப்பிச் செலுத்தாத வரையில் தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளியிட தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 4.99 கோடி ரூபாய் டிஎம்ஒய் நிறுவனத்திற்கு செலுத்தியப் பிறகு, தர்பார் திரைப்படம் மலேசியாவில் வெளிட முடியும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.