Home One Line P1 வல்லினம் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்ற “நவீன இலக்கிய முகாம்”

வல்லினம் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்ற “நவீன இலக்கிய முகாம்”

1001
0
SHARE
Ad

கூலிம் – கடந்த டிசம்பர் 22ஆம் திகதி, சுங்கை கோப் மலையில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்யம் குரு நிலையில் வல்லினம் விருது விழா சிறப்பாக நடைபெற்றது.

மலேசியாவின் மூத்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது அவர்களுக்கு மலேசிய இலக்கியப் பங்களிப்புக்காக இவ்வருடம் அவ்விருது வழங்கப்பட்டது. இந்த விருதை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆவணப்படத்தை சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களும் ‘அக்கினி வளையங்கள்’ என்ற நாவலை தமிழக எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களும் வெளியிட விருது தொகையான 5000 ரிங்கிட் மற்றும் கேடயத்தை தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் பீர்முகம்மதுவுக்கு வழங்கினார்.

இந்த விருது விழாவுக்கு முந்தைய இரண்டு நாட்கள் நவீன இலக்கிய முகாம் நடைபெற்றது. எழுத்தாளர்கள் ஜெயமோகன், சு.வேணுகோபால், கவிஞர் சாம்ராஜ், அருண்மொழி நங்கை ஆகியோர் இந்த முகாமை வழிநடத்தினர். சுமார் 100 பேர் கலந்துகொண்ட இந்த முகாமில் சங்க இலக்கியம், நவீன இலக்கியம் மற்றும் உலக இலக்கியம் ஆகியவை விவாதிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

வல்லினம் பதிப்பில் வந்த நான்கு நூல்கள் இந்த நவீன இலக்கிய முகாமில் வெளியீடு கண்டன. ஒவ்வொரு நூல் குறித்து தமிழக எழுத்தாளர்களின் விமர்சன உரையும் இடம்பெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த இலக்கிய ஆர்வலர்கள் இந்த முகாமில் கலந்து பலன் பெற்றனர்.

வல்லினம் விருது விழா நிகழ்ச்சியின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்:

பீர் முகம்மதுவின் ஏற்புரை