Home One Line P1 சளிக்காய்ச்சல் காரணமாக சிலாங்கூர், பினாங்கில் ஒரு சில பள்ளிகள் அடைப்பு!

சளிக்காய்ச்சல் காரணமாக சிலாங்கூர், பினாங்கில் ஒரு சில பள்ளிகள் அடைப்பு!

862
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏ வகை சளிக்காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவியுள்ளதால், பினாங்கு மற்றும் சிலாங்கூர் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளி மூடப்பட்ட அறிக்கைகளைப் பெற்றதாக கல்வி அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

அனைத்து கல்வி நிறுவனங்களிலும், குறிப்பாக பள்ளிகளில், தொற்றுநோயின் சமீபத்திய முன்னேற்றங்களை அமைச்சகம் தற்போது கவனித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

மாநில கல்வித் துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை தொடர்ந்து கண்காணிக்கும்என்று கல்வி அமைச்சு இன்று புத்னகிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

பள்ளிகள் “ஏ” வகை சளிக்காய்ச்சல் நோய்க் கட்டுப்பாட்டு தரநிலை இயக்க நடைமுறைக்கு முழுமையாக இணங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. எந்தவொரு மூடல் நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பின்னரே மேற்கொள்ளப்படுகின்றன என்று அது தெரிவித்துள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அல்லது பள்ளி மாணவர்களைக் கண்காணிக்கவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படுகின்றன. நோய்த்தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், கிளினிக் அல்லது மருத்துவமனையில் உடனடி சிகிச்சைக்காக பெற்றோர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜலதோஷம், தொண்டை வலி, இருமல் மற்றும் தலைவலி, தசை வலி, மூட்டு வலி மற்றும் சோர்வு போன்ற பிற அறிகுறிகளுடன் ஏ வகை சளிக்காய்ச்சல் பரவுகிறது.

பருவகால சளிக்காய்ச்சல் கிருமி என்றபோதிலும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.