மலேசியாவில் லோட்டஸ் பைவ் ஸ்டார் நிறுவனத்தின் வெளியீடாகத் திரைகாணும் தர்பார் படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் மலேசியாவின் டிஎம்ஒய் என்ற திரைப்படங்களுக்கான வெளியீட்டு நிறுவனத்திற்கும் இடையில் நிலவி வந்த கடன் பிரச்சனையால் சென்னை உயர் நீதிமன்றம் தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட தடை விதித்தது.
பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும் நிலையில் நாளை வியாழக்கிழமை ஜனவரி 9-ஆம் தேதி முதல் தர்பார் மலேசியாவில் திரையிடப்படும் என லோட்டஸ் பைப் ஸ்டார் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
அதற்கேற்ப, இன்றைய தமிழ் நாளிதழ்களில் தர்பார் படம் நாடெங்கிலும் திரையிடப்படும் திரையரங்குகளின் பட்டியல் விளம்பரமாக வெளியிடப்பட்டது.
கோல்டன் ஸ்கிரீன் திரையரங்கு நிறுவனமும் தனது இணையத் தளத்தில் படத்திற்கான நுழைவுச் சீட்டுகளுக்கான விற்பனையைத் தொடக்கியுள்ளது. நாட்டின் மற்றொரு பெரிய திரையரங்கு நிறுவனமாக டிஜிவி எனப்படும் தஞ்சோங் கோல்டன் வில்லேஜ் நிறுவனமும் தங்களின் இணையத் தளங்களில் நுழைவுச் சீட்டு விற்பனையைத் திறந்துள்ளது.