Home One Line P2 மலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு!

மலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு!

976
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மெயில்

புது டில்லி: மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்குமாறு இந்தியா வாய்வழியாக செம்பனை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் வணிகர்களைக் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகள் மற்றும் அதன் புதிய குடியுரிமைச் சட்டம் குறித்து மலேசிய விமர்சனத்தைத் தொடர்ந்து, அரசு மற்றும் தொழில்துறை வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் செம்பணை சரக்குகளை வாங்கும் நாடு இந்தியா.

#TamilSchoolmychoice

பெயர் குறிப்பிட விரும்பாத, இந்தியாவின் காய்கறி எண்ணெய் துறையின் மூத்த அதிகாரி கூறுகையில் , மலேசியாவை புறக்கணிக்க புது டில்லியில் கடந்த திங்களன்று 20-க்கும் மேற்பட்ட காய்கறி எண்ணெய் தொழில் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சுத்திகரிப்பாளர்களை அரசாங்கம் இவ்வாறு கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

திங்களன்று நடந்த கூட்டத்தில் மலேசிய செம்பனை எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்குமாறு வாய்மொழியாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

மலேசியாவிலிருந்து இறக்குமதியை எவ்வாறு குறைப்பது என்பதைப் பார்ப்பதற்கு நாங்கள் அரசாங்கத்திற்கும் தொழில்துறையினருக்கும் பல்வேறு சுற்று சந்திப்புகளைச் நடத்தியுள்ளோம்என்று இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்

ஆயினும், இந்தியா இன்னும் குறிப்பிட்ட ஒரு செயல் திட்டத்தை உறுதிப்படுத்தவில்லை என்றும், மேலும் பல்வேறு விருப்பங்களை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்தும், புதிய இந்திய குடியுரிமைச் சட்டம் குறித்தும் இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய இந்த நடவடிக்கைக்கு வித்திட்டதகாகக் கூறப்படுகிறது.