Home One Line P1 கிமானிஸ் இடைத்தேர்தல்: “நஜிப் உரையாடல்களின் பதிவுகள் தேமுவின் ஆதரவை பாதிக்காது!”- சாஹிட் ஹமீடி

கிமானிஸ் இடைத்தேர்தல்: “நஜிப் உரையாடல்களின் பதிவுகள் தேமுவின் ஆதரவை பாதிக்காது!”- சாஹிட் ஹமீடி

704
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று புதன்கிழமை, நஜிப் ரசாக்கின் உரையாடல்கள் பதிவுகளை வெளியிட்டதன் விளைவாக கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் பிரச்சாரத்தை பாதிக்காது என்று அம்னோ மற்றும் தேசிய முன்னணி தலைவருமான டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

கிமானிஸ் வாக்காளர்கள் மதிப்பீடு செய்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க முடியும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கிமானிஸில் உள்ள வாக்காளர்கள் அமலாக்கக் குழுவால் வெளியிடப்பட்ட புலனாய்வுப் பொருள்களை அம்பலப்படுத்தியதால் அவர்கள் கலக்கமடையமாட்டார்கள் என்று நம்புகிறேன்.”

எந்தவொரு சட்ட அமலாக்கக் குழுவும் திறமையாக, புத்திசாலித்தனமாக செயல் பட வேண்டும். ஆனால், அது ஓர் அரசியல் கருவியாக இருக்கக்கூடாது, குறிப்பாக எந்தவொரு தேர்தலிலும் பிரச்சனைகளைத் திசைதிருப்பும் கருவியாக இருக்கக்கூடாது”

என்னைப் பொறுத்தவரை, கிமானிஸில் உள்ள வாக்காளர்கள் மதிப்பீடு செய்து புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். தேசிய முன்னணி வேட்பாளர் மீதான அவர்களின் நம்பிக்கையை இது பாதிக்காதுஎன்று நேற்று புதன்கிழமை அவர் கூறினார்.

முன்னதாக, நேற்று எம்ஏசிசி ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஒன்பது உரையாடல்கள் பதிவுகளை வெளிப்படுத்தியது. நஜிப் உட்பட பல உயர்மட்ட நபர்களின் உரையாடல்கள் அவற்றில் இடம்பெற்றன. 

அவரது மனைவி ரோஸ்மா, முன்னாள் எம்ஏசிசி தலைமை ஆணையர் சுல்கிப்ளி அகமட் மற்றும் முன்னாள் தாபோங் ஹாஜி வாரியத் தலைவர் அப்துல் அசிஸ் அப்துல் ராகிம் ஆகியோரின் உரையாடல்களும் அடங்கியிருந்தன.