Home One Line P1 கைது செய்யப்பட்ட பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் யார்?

கைது செய்யப்பட்ட பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர் யார்?

732
0
SHARE
Ad

ஷா ஆலாம் – திங்கட்கிழமை (ஜனவரி 13) அதிகாலை 1.30 மணியளவில் போதைப் பொருள் பயன்பாட்டுக்காக கைது செய்யப்பட்ட சிலரில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஒருவர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெர்சாத்து கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோ அப்துல் ரஷிட் அன்சாரி இதனை உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்துக் கருத்துரைத்திருந்த பிரதமர் மகாதீர் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள், நானே தவறிழைத்தாலும் காவல்துறையினரால் கைது செய்யப்படுவேன் எனக் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

பூச்சோங்கில் நடைபெற்ற காவல்துறையின் அதிரடி சோதனையில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், 4 அரசியல் சிறப்பு அதிகாரிகள் ஆகியோர் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த சட்டமன்ற உறுப்பினர் டெங்கில் சட்டமன்ற உறுப்பினர் அடிப் சியான் அப்துல்லா எனத் தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில் அவர் மலேசியாகினி ஊடகத்திடம் அதனை மறுத்து, அந்த சமயத்தில் தான் வீட்டில் இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் அவர்களின் பெயர்களைத் தற்போது வெளியிட முடியாது என காவல் துறைத் தலைவர் அப்துல் ஹமிட் பாடோர் கூறியுள்ளார்.