Home One Line P1 ஜாவி பாடம் போதிப்பு தொடர்பில் முஜாஹிட், டோங் சோங் உடன்பாட்டை எட்டினர்!

ஜாவி பாடம் போதிப்பு தொடர்பில் முஜாஹிட், டோங் சோங் உடன்பாட்டை எட்டினர்!

766
0
SHARE
Ad
படம்: நன்றி மலாய் மெயில்

கோலாலம்பூர்: சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி பாடம் போதிப்பு குறித்த விவகாரம் தொடர்பில்,  பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் மற்றும் டோங் ஜியாவ் சோங் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

நேற்று புதன்கிழமை புத்ராஜெயாவில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு இது தெரிவிக்கப்பட்டது.

ஜாவி பாடம் என்பது முஸ்லிம் அல்லாத மாணவர்களை இஸ்லாமியமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், அது மலேசிய பாரம்பரியமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் சீன பள்ளி வாரியங்கள் கூட்டமைப்பு (டோங் சோங்) மற்றும் சீன பள்ளி ஆசிரியர் சங்கம் (ஜியாவ் சோங்) அமைச்சரின் கருத்துக்கு பிறகு ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஜாவி கற்றல் மற்றும் கற்பிப்பிற்கு எதிராக டோங் ஜியாவ் சோங்கின் பிரச்சனை இனி எழாது என்பதையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.”

டோங் சோங் ஓர் இனவெறி அமைப்பு அல்ல.”

எழுப்பப்பட்ட பிரச்சனையானது அனைத்து தரப்பினரும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்குப் பிறகு தேவைப்படும் கற்றல் முறையாகும்என்று அவர் கூறினார்.

இச்சந்திப்புக் கூட்டத்தின் முடிவுகளை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார்.

பிற இனத்தின் உணர்திறனை பாதிக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்து தரப்பினரும் பதற்றத்தை குறைக்க வேண்டும் என்று நேற்றையக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒப்புக் கொண்டதாகவும் முஜாஹிட் கூறினார்.

புத்திசாலித்தனமான மற்றும் சிந்தனைமிக்க அணுகுமுறையின் மூலம் மற்ற தரப்பினரை புண்படுத்தும் பிரச்சனைகள் குறித்த பதட்டத்தை அனைத்து தரப்பினரும் அகற்ற வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.”

இந்த நிலைமை மிகவும் முக்கியமானது, ஒரு சிலரின் சுய இலாபத்திற்காக இதனை பயன்படுத்தி நிலைமையை மோசமாக்க முற்படுவார்கள்”  என்று அவர் கூறினார்.