Home One Line P1 “பொங்கல் குறித்து கல்வி அமைச்சின் சுற்றறிக்கை சரியாக வடிவமைக்கப்படவில்லை!”- முஜாஹிட்

“பொங்கல் குறித்து கல்வி அமைச்சின் சுற்றறிக்கை சரியாக வடிவமைக்கப்படவில்லை!”- முஜாஹிட்

907
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொங்கல் திருநாள் உட்பட எந்தவொரு பண்டிகைகளையும், ஜாகிம் தடை செய்யவில்லை என்றும், முஸ்லிம்கள் பங்கேற்க விரும்பினால் அதற்கு வழிகாட்டுதல்களை மட்டுமே அது வழங்கியது என்றும் பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசோப் தெரிவித்தார்.

ஜாகிமின் கருத்துகளை மேற்கோள் காட்டும் பொங்கல் குறித்த கல்வி அமைச்சின் சுற்றறிக்கை நன்கு திட்டமிடப்படவில்லை என்றும் சர்ச்சையைத் தூண்டியது என்றும் முஜாஹிட் கூறினார்.

நான் அதை தெளிவாகக் கூற விரும்புகிறேன், ஜாகிம் எந்த பண்டிகைகளையும் தடை செய்யவில்லை.”

#TamilSchoolmychoice

உண்மையில், கல்வி அமைச்சுக்கு நாங்கள் எழுதிய கடிதம், முஸ்லிம்கள் மற்றவர்களை மதித்து கலந்துகொள்ளும் வழிகளைத் தெளிவாகக் கூறுகிறது. மற்ற மத நிகழ்ச்சிகளில் எவ்வாறு கலந்துகொள்வது என்பதற்கு ஒரு நெறிமுறை உள்ளது, இது சாதாரணமானது.”

ஆனால், மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், சுற்றறிக்கை ஏன் சரியாக வடிவமைக்கப்படவில்லை. திடீரென்று ஜாகீம் மீது சர்ச்சை எழுந்துள்ளது,” என்று அவர் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மாநில கல்வித் துறையின் கல்வி இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், மலேசிய துணை கல்வி இயக்குநர், அட்ஜ்மான் தாலிப் முஸ்லிம்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் ஜாகிம் கல்வி அமைச்சுக்கு தனது கருத்தை மட்டுமே தெரிவித்ததாக முஜாஹிட் வலியுறுத்தினார்.