Home உலகம் எந்த நேரத்திலும் போர், ஒத்திகையை தொடங்கியது வட கொரியா

எந்த நேரத்திலும் போர், ஒத்திகையை தொடங்கியது வட கொரியா

582
0
SHARE
Ad

 index வடகொரியா, ஏப்.8- வட கொரியா எந்த நேரத்திலும் ஏவுகணைச் சோதனையை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. வருகிற 10 ஆம் தேதி வடகொரியா தனது ஏவுகணையை சோதித்துப் பார்த்து பதற்றத்தை ஏற்படுத்த அந்நாடு முயற்சிக்கும் என தென் கொரியா கூறியுள்ளது.

புதன்கிழமைக்குள் வெளிநாட்டு தூதர்கள் வெளியேற வேண்டும் என வடகொரியா அறிவுறுத்தியிருப்பதையும் தென்கொரியா சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே வடகொரியா ராணுவத்தினர் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். போர் நாய்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுவருவதாக தெரிகிறது.