வியட்னாம், ஏப்.8- கைத்தொலைபேசி (மொபைல் போன்) தயாரிப்பு மற்றும் விற்பனையில், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சாம்சுங் நிறுவனம், மொபைல் போன்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை ஒன்றை, சென்ற வாரம் வியட்னாம் நாட்டில் அமைத்திட, பூர்வாங்கப் பணியினைத் தொடங்கியது.
இதன் திட்ட மதிப்பீடு 200 கோடி டாலர். படிப்படியாக இந்த ஆலை அமைக்கப்படும் நிலையிலேயே, மொபைல் போன் தயாரிப்பு தொடங்கப்படும். 2015 ஆம் ஆண்டில் முழுமை அடையும் போது, இங்கு ஆண்டுக்கு, 12 கோடி மொபைல் போன்கள் தயாரிக்கப்படும். ஏற்கனவே இதே அளவில் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை வியட்னாமில் சாம்சுங் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.