Home One Line P1 “2 மில்லியன் நிதியை எனக்காக நான் பெறவில்லை!”- தெங்கு அட்னான்

“2 மில்லியன் நிதியை எனக்காக நான் பெறவில்லை!”- தெங்கு அட்னான்

667
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அசெட் காயாமாஸ் செண்டெரியான் பெர்ஹாட் இயக்குனர் சாய் கின் கொங்கிடமிருந்து பெறப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட் பணம், அம்னோவுக்காக, சுங்கை பெசார் மற்றும் கோலா கங்சார் இடைத் தேர்தலின் அரசியல் பங்களிப்பாகப் பெறப்பட்டது என்று இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அந்த 2 மில்லியன் ரிங்கிட்டும் எனக்கு தேவையில்லை என்று தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன்.”

#TamilSchoolmychoice

இந்த நிதியை எனக்காக ஒருபோதும் நான் பெற விரும்பவில்லை.”

நான் 2001-இல் அமைச்சரவையில் சேருவதற்கு முன்பு, நான் ஒரு வெற்றியடைந்த தொழிலதிபர். பெரும் சொத்துகளை நான் கொண்டிருந்தேன்.என்று முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் தெரிவித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டில் சாயிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்றதாக அட்னான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே சாயிடமிருந்து பெற்ற இந்த பணம் சுங்கை பெசார் மற்றும் கோலா கங்சார் இடைத் தேர்தலுக்கான அரசியல் பங்களிப்பு என்று தாம் கூறிவருவதாக அட்னான் தெரிவித்தார்.

தாட்மான்சோரி ஹோல்டிங்ஸ் செண்டெரியான் பெர்ஹாட் கணக்கிற்கு சாயிடமிருந்து ஒரு காசோலையைப் பெற்றதாக அவர் கூறினார்.

இரண்டு தேர்தல்களுக்கான பிரச்சாரங்களையும் பிற செலவுகளையும் நடத்துவதற்கு தனது சொந்த பணத்தை முன்கூட்டியே பயன்படுத்தியதாகவும் தெங்கு அட்னான் மேலும் கூறினார்.

சாயிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தன்னை தற்காத்துக் கொள்ள முன்னாள் அம்னோ பொதுச் செயலாளருமான அட்னானுக்கு  நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.