Home One Line P1 பெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூன் 25 தொடங்குகிறது!

பெர்சாத்து கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டம் ஜூன் 25 தொடங்குகிறது!

640
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சி தனது முதல் நான்கு நாள் பொதுக் கூட்டத்தை ஜூன் 25 முதல் நான்கு நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது.

கட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு வரும் ஜனவரி 26-ஆம் தேதி தொடங்கும் என்றும், பிப்ரவரி 15 முதல் மார்ச் 29 வரை கிளை மட்டக் கூட்டமும், ஏப்ரல் 18-ஆம் தேதி பிரிவு அளவிலான கூட்டமும் நடைபெறும் என்றும் அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

தகுதிவாய்ந்த தொகுதிகளின் எண்ணிக்கை 189 ஆகும். மாநாட்டில் பங்கேற்க தகுதியான உறுப்பினர்களின் எண்ணிக்கை 363,167″ என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை பெர்சாத்து கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் கூறினார்.