புது டில்லி: பாஜகவின் புதிய தேசிய தலைவராக ஜே.பி.நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, முன்னாள் தேசியத் தலைவர் அமித் ஷாவிடமிருந்து ஜே.பி.நட்டா இப்பதவியை ஏற்பார் என்று ஆருடங்கள் இருந்து வந்த நிலையில், இன்று திங்கட்கிழமை அவர் போட்டியின்றி தேர்வாகி உள்ளார்.
நட்டாவின் பெயரை கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்டோர் முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடந்த மாநிலத் தேர்தல்களில், பாஜக வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக, கடந்த கால இழப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.