கோலாலம்பூர்: பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் பிளாஸ் நெடுஞ்சாலை கட்டணக் குறைப்பு, நிதி நிலை மற்றும் வளங்களை பாதிக்காது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
2038 முதல் 2058 வரை 20 ஆண்டு காலத்திற்கு நீட்டிப்பதும் நிறுவனத்திற்கு போதுமான வருவாயைப் பெற உதவும் என்றும் அவர் கூறினார்.
முக்கியமாக எதிர்காலத்தில் நெடுஞ்சாலைகளின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் இந்த கால நீட்டிப்பு உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
விகிதங்களைக் குறைப்பது சேவைகளின் தரத்தையும் பாதிக்காது என்று அவர் கூறினார்.
“18 விழுக்காடு குறைப்பதன் மூலமும், 38 ஆண்டு காலம் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதும், பிளாஸ் நிறுவனம், பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு போதுமான நிதியைத் திரட்ட முடியும்”
இந்த ஆண்டு பிளாஸ் நெடுஞ்சாலை கட்டண விகிதம் 18 விழுக்காடு குறைக்கப்படும் என்றும், 2058-ஆம் ஆண்டு வரை இந்த நீட்டிப்பு காலம் இருக்கும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
வாழ்க்கைச் செலவைக் குறைக்க உதவும் நோக்கத்துடன் பிளாஸ் நெடுஞ்சாலைகளின் கட்டணம் குறைக்கப்பட்டதாக அவர் கூறினார்.