Home One Line P1 எம்ஏசிசி: அகமட் மஸ்லான், ஷாரிர் சாமாட் கைது!

எம்ஏசிசி: அகமட் மஸ்லான், ஷாரிர் சாமாட் கைது!

811
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான் மற்றும் முன்னாள் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிர் சாமாட் ஆகியோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று திங்கட்கிழமை கைது செய்தது.

அம்னோ தலைவர்களான இருவரும் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டப்படுவார்கள்.

ஷாகிர் மற்றும் அகமட் ஆகியோர் 2011-ஆம் ஆண்டுக்கான பணமோசடி தடுப்புச் சட்டம், பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் விளைவு சட்டத்தின் கீழ் தலா ஒன்று மற்றும் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும்என்று எம்ஏசிசி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

காலை 10.10 மணிக்கு அகமட் கைது செய்யப்பட்ட நிலையில், ஷாரிர் காலை 11.22 மணிக்கு கைது செய்யப்பட்டார்.

புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் விசாரணைக்காக வந்திருந்த அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாக எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

பின்னர் அவர்கள் எம்ஏசிசி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.