Home One Line P1 ஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமா?

ஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமா?

843
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசியலில் நிரந்தர எதிரியும், கூட்டணியும் இல்லை என்றும், தாம் பலருடன் பணியாற்றி உள்ளதாகவும்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

இருப்பினும், தாம் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் உடன் ஒத்துழைக்கப் போவதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

உங்களுக்கு தெரியும், நான் முன்பு (முன்னாள் பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக் உடன் பணியாற்றியது. ஆனால், இப்போது நான் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்குடன் இருக்க முடிகிறது.”

#TamilSchoolmychoice

நான் அவர் (கிட் சியாங்) மீது வெறுப்பைக் கொண்டிருக்கவில்லை. எங்களால் ஏதாவது நல்லது செய்ய முடிந்தால், நான் அவருடன் ஒத்துழைப்பேன். ஆனால், நஜிப், அவர் சட்டத்தை மீறியதால் அவர் எதையும் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவர் அரசாங்க பணத்தை திருடுவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என்று அவர் கூறினார்.

தமது ஆதரவாளர்கள் பாஸ் கட்சியை பெர்சாத்துக்குள் கொண்டு வரும் முயற்சியை முன்னெடுப்பதைப் பற்றி வினவிய போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, புதிய அரசியல் கூட்டணியைத் தொடங்குவதற்கு, ஜசெகவை கூட்டணியிலிருந்து நீக்கவும், அன்வார் இப்ராகிமை பிரதமராக வர விடாமல் இருப்பதற்காகவும் திட்டங்கள் வகுத்து வருவதாக எப்எம்டி செய்தி வெளியிட்டிருந்தது.

ஆம், பாஸ் தலைவர், அப்துல் ஹாடி அவாங்குடன் எனது படம் உள்ளது.”

மோசமான நிருபர்கள் உட்பட அனைவரையும் நான் சந்திக்கிறேன். நல்ல நிருபர்களும் உள்ளனர். அதுவே எனது வேலை. மக்கள், என் எதிரிகள் மற்றும் எல்லாவற்றையும் மீறி அனைவரையும் சந்திக்கிறேன்,” என்று அவர் கூறினார்.