Home One Line P2 காட்டுத் தீக்கு பிறகு தூசி புயலால் ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பு!

காட்டுத் தீக்கு பிறகு தூசி புயலால் ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பு!

768
0
SHARE
Ad

சிட்னி: கடும் காட்டுத் தீக்கு ஆளாகி வறட்சியைச் சந்தித்து வரும் ஆஸ்திரேலிய கிராமப்புறங்கள் இப்போது தூசி புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

அவை தொடர்ந்து நகர்ந்து சிட்னி நகரம் உட்பட அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளை அச்சுறுத்தும் என்று அஞ்சப்படுகிறது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சிவப்பு தூசி புயல் தூபோ, நியூ சவுத் வேல்ஸ் போன்ற கிராமப்புறங்களில் பரவியதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

நான் உதவியற்றவளாகி உள்ளேன். குளத்தின் அடிப்பகுதியைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. (ஏனெனில் தண்ணீரில் தூசிகள் சூழ்ந்துள்ளது), குழந்தைகளின் குளம் சேறும் சகதியுமாக மாறிவிட்டதுஎன்று டோட்டன்ஹாம் குடியுரிமை நீச்சல்குள மேலாளர் தன்யா புல்டன் குறிப்பிட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலத்தைத் தாக்கிய தூசி புயல்கள் குறுகிய கால குளிரூட்டலை பாதித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் இந்த பேரழிவுகரமான தீ விபத்தில் 29 பேரும், ஒரு பில்லியன் விலங்குகளும் கொல்லப்பட்டன.