சிரம்பான் – ஒரு நகரம் 500,000-க்கும் கூடுதலான மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலோ, அதன் ஆண்டு வருமானம் 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலாக இருந்தாலோ அந்த நகர் மாநகராக அந்தஸ்து உயர்த்தப்படும் என்ற நடைமுறைக்கு ஏற்ப நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரான சிரம்பான் மாநகராக உருமாறுகிறது.
சிரம்பான் நகரின் தற்போதைய மக்கள் தொகை 619,100 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மலேசிய நாட்டிலுள்ள மாநகர்களின் வரிசையில் 15-வது மாநகராக சிரம்பான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2008 நவம்பர் 12-ஆம் தேதி சிரம்பான் நகராட்சியையும், நீலாய் நகராட்சியையும் ஒன்றிணைத்து சிரம்பான் மாநகராக உருவாக்கும் முதல் கட்ட விரிவாக்க முயற்சியை நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் அங்கீகரித்தது.
அதைத் தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் மாநகராட்சியாக சிரம்பான் செயல்படத் தொடங்கியுள்ளது.
சிரம்பான் மாநகராட்சி உருமாற்றத்தை விளக்கும் பெர்னாமா வரைபடத்தைக் கீழே காணலாம்: