Home One Line P1 “பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது!”- ஹாடி அவாங்

“பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, எளிதாக ஒப்படைத்து விடமுடியாது!”- ஹாடி அவாங்

698
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமரை மாற்றுவது பேருந்து ஓட்டுனர்களை மாற்றுவது போல எளிதானது அல்ல என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு இடையிலான பிரதமர் பதவி பரிமாற்ற ஒப்பந்தம் இஸ்லாத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இன்னும் அது குறித்து ஆலோசிக்கலாம் என்று அவர் கூறினார்.

பதவி விடுவதை நாங்கள் நியாயப்படுத்த முடியாது. இஸ்லாத்தில் அனைத்து ஒப்பந்தங்களும் இஸ்லாத்துடன் இணக்கமாக இருக்க வேண்டும், ஏனென்றால் நாம் முஸ்லிம்கள்.”

#TamilSchoolmychoice

பேருந்து ஓட்டுனர்களை மாற்றுவது போல நாட்டின் தலைமையை மாற்றுவதை நாம் கருத்தில் கொள்ள முடியாது. நாம் பேருந்து ஓட்டுனரை மாற்ற விரும்பினாலும், கோலாலம்பூருக்கு செல்ல விரும்பினால், கோலாலம்பூருக்கு அழைத்து செல்லும் ஓட்டுனர் இருக்க வேண்டும்.”

பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைக்கப்படுவது மகாதீரின் முழுமையான உரிமை அல்ல என்று ஹாடி மேலும் கூறினார்.

ஜனநாயகத்தில் பிரதமர் பதவி மக்களுக்கு சொந்தமானது, அதை மக்களிடம் விட்டு விடுங்கள்.”

மக்கள் நம்பவில்லை என்றால் தேர்தல் நடக்கட்டும்.என்று அவர் மேலும் கூறினார்.

மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையிலான அதிகார பரிமாற்ற பிரச்சனை தொடர்ந்து சில நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள், குறிப்பாக ஜசெக மற்றும் பிகேஆர் தலைவர்கள் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.