“இதுபோன்று, இந்த தனிநபர் சம்பந்தப்பட்ட எந்தவொரு விவகாரத்திற்கும் துணை பிரதமர் அல்லது டாக்டர் வான் அசிசா அலுவலகத்துடன் எந்த தொடர்பும் இல்லை” என்று துணை பிரதமர் அலுவலகம் இன்று வெள்ளிக்கிழமை டாக்டர் வான் அசிசாவின் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, துணை பிரதமர் அலுவலகத்தின் நற்பெயரை அந்த நபர் துஷ்பிரயோகம் செய்ததால் காவல் துறையில் புகார் அறிக்கை அளிக்கப்படும் என்று அது தெரிவித்துள்ளது.
இந்த இடுகையில் துணை பிரதமர் அலுவலகத்தின் ஆலோசகராக பணியாற்றியதாகக் குறிப்பிடும் அந்த தனிநபரின் வணிக அட்டையின் படமும் பதிவிடப்பட்டிருந்தது.
Comments