Home One Line P2 இந்திய பூப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்!

இந்திய பூப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்!

600
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் பிரபல பூப்பந்து வீராங்கனை சாய்னா நேவால் இன்று புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.

டில்லி சட்டமன்றத்திற்கான பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக சாய்னா நேவால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டமன்றத்தின் தேர்தல் வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வேட்பு மனுத்தாக்கல் 14-ஆம் தேதி தொடங்க உள்ளது.

#TamilSchoolmychoice

பதிவான வாக்குகள் பிப்ரவரி 11-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது