Home One Line P1 மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை பார்வையிட்ட மாமன்னர்!

மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை பார்வையிட்ட மாமன்னர்!

582
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா மீண்டும் மக்கள் மீதான தமது அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், இன்று புதன்கிழமை மெக்ஸ் நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் சிக்கியவரை நேரடியாக இறங்கி நலம் விசாரித்தார்.

இஸ்தானா நெகாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்த காணொளி வெளியிடப்பட்டிருந்தது. அவர் காரிலிருந்து இறங்கி சம்பந்தப்பட்டவரிடம் நலம் விசாரித்தார்.

அவர் பிரதமருடனான அமைச்சரவைக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது இந்த சம்பவத்தைக் கண்டதாகக் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

விபத்தில் சிக்கிய ஓட்டுனரை பரிசோதித்து விசாரித்தபோது, ​​மாமன்னர் மீண்டும் புத்ராஜெயாவுக்குப் புறப்பட்டார்.

முன்னதாக, கடந்த நவம்பரில் புத்ராஜெயாவில் ஒரே நாளில் இரண்டு விபத்துக்களின் போது, சுல்தான் அப்துல்லா சம்பந்தப்பட்டவர்களை சந்தித்துப் பேசியது பரவலகாப் பகிரப்பட்டன.

விபத்துகளைத் தவிர்ப்பதற்காக கடும் மழையின் போது கவனமாக வாகனம் ஓட்டுமாறு அனைத்து ஓட்டுனர்களுக்கும் மாமன்னர் அறிவுறுத்தினார்.