Home One Line P1 யுஇசி தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்!

யுஇசி தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்!

756
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒருங்கிணைந்த தேர்வு சான்றிதழை (யுஇசி) நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்தால் ஜசெக அரசாங்கத்திலிருந்து விலகும் என்று ஜசெக துணை பொதுச்செயலாளர் எங் கோர் மிங் தெரிவித்தார்.

யுஇசி அங்கீகரிக்கப்படாவிட்டால் ஜசெக அரசாங்கத்திலிருந்து விலகும் என்று நாங்கள் ஒருமித்த கருத்தை அடைந்துள்ளோம். நாங்கள் இனி ஆளும் அரசாங்கத்தின் பகுதியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இதுதான் நாங்கள் ஆதரிக்கும் கொள்கை,” என்று எங் ஓரியண்டல் டெய்லிக்கு தெரிவித்தார்.

கடந்த 2018-ஆம் பொதுத் தேர்தலுக்கான நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, யுஇசியை அரசாங்கம், குறிப்பாக ஜசெக, அங்கீகரிப்பதில் காலத்தாமதமாக செயல்பட்டதால், சீன சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கைக் கூட்டணி கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

யுஇசி அங்கீகாரம் உட்பட பல விஷயங்களில் ஜசெக அமைதியாக இருப்பதற்காக ஜசெக விமர்சிக்கப்பட்டது.

ஜசெக அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறியபின் அமைதியாக இல்லை. (உண்மையில்) நாங்கள் பேசுவதற்கு தைரியமாக இருக்கிறோம், இப்போது எங்களுக்கு அரசாங்கத்தில் முறையான வழிகள் உள்ளன, இதனை அமைச்சரவைக் கூட்டங்களில் காணலாம்என்று எங் எடுத்துரைத்தார்.