Home 13வது பொதுத் தேர்தல் செகாமட் தொகுதியில் சுவா ஜூய் மெங் போட்டி – அன்வார் அறிவிப்பு

செகாமட் தொகுதியில் சுவா ஜூய் மெங் போட்டி – அன்வார் அறிவிப்பு

780
0
SHARE
Ad

Chua Jui Mengஜோகூர், ஏப்ரல் 9 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில், ஜோகூர் மாநில பிகேஆர் தலைவர் சுவா ஜூய் மெங் (படம்), செகாமட் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

நேற்று தங்காக்கில் பிகேஆர் சார்பாக நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்வார், சுவா ஜூய் மெங்கை செகாமட் தொகுதி வேட்பாளராக அறிவித்ததோடு, ஜோகூர் மாநிலத்தில் பிகேஆர் சார்பாக போட்டியிடும் மேலும் 5 வேட்பாளர் பெயர்களையும் அறிவித்தார்.

அதன் படி, ஜோகூர் மாநிலம் லெடாங் நாடாளுமன்ற தொகுதியில், ஜோகூர் பிகேஆர் துணைத் தலைவர் ஹஸ்ஸான் கரீமும், ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற தொகுதியில், மாநில தேர்தல் குழுத் தலைவர் முகமத் கஸ்ஸான் அபு பக்கரும், செக்கிஜாங் தொகுதியில் ஜூலி செமானியும், செம்போராங் தொகுதியில் ஓன் அபு பக்கரும் மற்றும் பாசீர் கூடாங் தொகுதியில் பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் அகமத் பாடிசி சைடியும் போட்டியிடுவார்கள் என்று அன்வார் அறிவித்தார்.

#TamilSchoolmychoice