Home One Line P2 அட்ராங்கி ரே: தனுஷின் மூன்றாவது இந்தித் திரைப்படம்!

அட்ராங்கி ரே: தனுஷின் மூன்றாவது இந்தித் திரைப்படம்!

769
0
SHARE
Ad

சென்னை: நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் இந்தித் திரைப்படங்களிலும் நடித்து தமக்கென்று ஓர் இடத்தினை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ராஞ்சனா எனும் திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகி இரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற தனுஷ், நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து இந்தி திரையுலகிலும் பெரிய அளவில் பார்க்கப்பட்டார். தற்போது, இந்தியில் தனது மூன்றாவது படத்தை தனுஷ் உறுதி செய்துள்ளார்.

மீண்டும் ராஞ்சனா திரைப்பட இயக்குனரான, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்திற்கு அட்ராங்கி ரே‘ (Atrangi Re) எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இத்திரைப்படம், 2021-ஆம் ஆண்டின் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.