Home One Line P2 சீனாவில் தனது 42 கடைகளைத் தற்காலிகமாக மூடுகிறது ஆப்பிள்

சீனாவில் தனது 42 கடைகளைத் தற்காலிகமாக மூடுகிறது ஆப்பிள்

1075
0
SHARE
Ad

பெய்ஜிங் – கொரொனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து சீனாவின் பலதரப்பட்ட வணிகங்களும் பாதிப்படைந்துள்ள நிலையில் தனது அனைத்து 42 கடைகளையும் தற்காலிகமாக மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை ஆப்பிள் நிறுவனக் கடைகள் சீனாவில் மூடப்பட்டிருக்கும். எனினும் இணையம் வழியான தங்களின் வாடிக்கையாளர்களுக்கான தொடரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆப்பிளின் மொத்த வருமானத்தில் 15 விழுக்காடு சீனாவில் நடைபெறும் விற்பனைகளின் மூலம் ஈட்டப்படுகிறது.

#TamilSchoolmychoice

கொரொனாவைரஸ் நிலைமை சீனாவில் இப்படியே தொடர்ந்து மார்ச் முதல் ஜூன் வரையில் ஐபோன்களின் விற்பனையில் 3 விழுக்காடு வீழ்ச்சியிருக்கும் என வணிக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

இதுவரையில் சீனா பொருளாதார ரீதியாக முதல் காலாண்டில் மட்டும் 62 பில்லியன் டாலர்கள் இழப்பீட்டை எதிர்நோக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.