Home One Line P1 தைப்பூசம்: இரவு 10 மணிக்கு இரதப் புறப்பாடு நடைபெறும்!

தைப்பூசம்: இரவு 10 மணிக்கு இரதப் புறப்பாடு நடைபெறும்!

862
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முருகக் கடவுள் மற்றும் வள்ளி, தெய்வானையை தாங்கிய பிரமாண்டமான இரத ஊர்வலம் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 6) இரவு 10 மணிக்கு ஜாலான் துன் எச்எஸ் லீயில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலிருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 3 மணியளவில் பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தைப்பூசத்திற்காக முப்பரிமாண விளக்குகளுடன் இரதம் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிருவாகம் தெரிவித்துள்ளது.

இரதத்தில் பயன்படுத்தப்படும் 1,000- க்கும் மேற்பட்ட ஒளி-உமிழும் டையோடு (எல்ஈடி) விளக்குகளும் திருவிழாவிற்கு புதிய தோற்றத்தைக் கொண்டு வரும் என்று ஸ்ரீ மகா மரியம்மன் கோயிலின் கெளரவ செயலாளர் சி.சேதுபதி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு பத்து மலையிலிருந்து இரதம் புறப்பட்டு, பிப்ரவரி 10-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு 100,000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் இரத ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இரத ஊர்வலத்தின் போது தேவையற்ற அசம்பாவிதங்கள், குழப்பங்களை ஏற்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.