Home One Line P1 கொரொனாவைரஸ்: அங்கீகரிக்கப்படாத பொய் செய்தியைப் பரப்பினால் தக்க நடவடிக்கை காத்திருக்கிறது!- காவல்துறை

கொரொனாவைரஸ்: அங்கீகரிக்கப்படாத பொய் செய்தியைப் பரப்பினால் தக்க நடவடிக்கை காத்திருக்கிறது!- காவல்துறை

605
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் கொரொனாவைரஸ் பாதிப்பு குறித்து தவறான அல்லது அங்கீகரிக்கப்படாத செய்திகளை பரப்புவதை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

கொரொனாவைரஸ் குறித்து தவறான செய்திகளைப் பரப்புவதற்கான பொறுப்பற்ற தன்மை மக்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

“இந்த செயல் பொறுப்பற்றது மற்றும் நியாயமற்றது, ஏனெனில் இது ஒரு தீவிரமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.”

#TamilSchoolmychoice

“செய்திகளை பரப்பியவர்களின் மீதான நடவடிக்கைகளை காவல் துறையினர் தீவிரமாக பரிசீலித்து வருகிறார்கள், இந்த விஷயத்தை கட்டுப்படுத்த தீர்க்கமான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் நேற்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொரொனாவைரஸ் குறித்து சட்டவிரோத செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீது விரைவில் வழக்குத் தொடரப்படும் என்று அவர் கூறினார்.

சமூக ஊடக தளங்கள் மூலம் சட்டவிரோத செய்திகளை பரப்பியது தொடர்பான 13 விசாரணை ஆவணங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர், அவற்றில் மூன்று நீதிமன்ற நடவடிக்கைக்கு அளிக்கப்பட்டுள்ளன.