கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான கூட்டணி அரசாங்கத்தை நிறுவுவது குறித்து அம்னோ நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க இரண்டு கூட்டங்கள் நடக்க இருப்பதாக மலேசியாகினிக்கு தகவல் கிடைத்திருப்பதாக அது தெரிவித்துள்ளது.
“உச்சமன்றக் குழு கூட்டத்தில் இது குறித்து எந்த ஆட்சேபணையும் இல்லை என்றால், இந்த ஒத்துழைப்பு நனவாகும்.”
“நாளை (பிப்ரவரி 7) காலை ஓர் அரசியல் குழு கூட்டம் நடக்கும். பிற்பகலில் அம்னோ உச்சமன்றக் குழு இந்த விஷயத்தில் ஒரு முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அம்னோ உள்வட்டாரம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் இது குறித்து அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியை சாடியிருந்தார்.
இந்த விவகாரம் முறைப்படி விவாதிக்கப்பட வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசன் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.