Home One Line P1 பினாங்கு: 16 வயது மாணவர் தற்கொலை, கல்வித் துறை விசாரிக்கும்!

பினாங்கு: 16 வயது மாணவர் தற்கொலை, கல்வித் துறை விசாரிக்கும்!

752
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: புக்கிட் மெர்தாஜாமில் 16 வயது மாணவர்  பள்ளியில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பினாங்கு மாநில கல்வித் துறை (ஜேபிஎன்பிபி) விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

அதன் இயக்குனர் அப்துல் ராஷிட் அப்துல் சாமாட், இந்த சம்பவத்தின் உண்மையான காரணத்தை தீர்மானிக்க தகவல்களை சேகரிப்பதாக கூறினார்.

மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் உள்விசாரணை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த செவ்வாய்க்கிழமை, உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் மாலை 6.15 மணியளவில் அறையின் விசிறியில் போர்வையைப் பயன்படுத்தி தூக்கிலிட்டுக் கொண்டதை அவரது தாயார் கண்டுள்ளார்.

பலியானவர் வீட்டிற்கு மூத்த பிள்ளை.

காவல் துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவரின் உடலில் தேடியதில் குற்றவியல் கூறுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்திய மலேசிய தமிழர் குரல் அமைப்பின் தலைவர் டேவிட் மார்வல் கூறுகையில், அம்மாணவர் தம்மை வேறொரு வகுப்புக்கு மாற்ற அனுமதிக்காத பள்ளியின் நடவடிக்கையின் காரணமாக அழுத்தம் ஏற்பட்டு இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.