Home One Line P1 கொரொனாவைரஸ் : போலியான தகவல் வெளியிட்ட விற்பனையாளர் குற்றம் சாட்டப்பட்டார்

கொரொனாவைரஸ் : போலியான தகவல் வெளியிட்ட விற்பனையாளர் குற்றம் சாட்டப்பட்டார்

410
0
SHARE
Ad

கோலா திரெங்கானு — பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், கொரொனா கிருமி குறித்து, போலியானத் தகவல்களை வெளியிட்டது தொடர்பில், தேங்காய் பால் விற்பனையாளர் ஒருவர், நேற்று வியாழக்கிழமை (பிப்ரவரி 6) கோல திரெங்கானு கீழ்நிலை (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

இருப்பினும், நீதிபதி நோர் டியானா அப்துல் அசிஸ் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை, 40 வயதான மர்சுகி அப்துல்லா மறுத்து விசாரணைக் கோரியிருக்கிறார்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கொரொனா கிருமி தொற்றினால் நோயாளி ஒருவர் சுல்தானா நூர் ஜஹீரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக போலியான தகவலை வெளியிட்டதாக, மர்சுகி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

லாடாங் தோக் பிலாம் குடியிருப்பு பகுதியில், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, காலை 8.22 மணியளவில், அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டிருக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது அவ்விரண்டுமே விதிக்க வகைச் செய்யும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் செக்‌ஷன் 505 உட்பிரிவு பி-யின் கீழ், இவ்வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஐந்து ஆயிரம் ரிங்கிட் பிணை (ஜாமின்) தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதம் பேரில், மர்சுகி விடுவிக்கப்பட்ட வேளையில், இவ்வழக்கு மார்ச் மூன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-பெர்னாமா