Home One Line P2 டெல்லி மாநிலத்தை ஆம் ஆத்மி மீண்டும் கைப்பற்றுமா?

டெல்லி மாநிலத்தை ஆம் ஆத்மி மீண்டும் கைப்பற்றுமா?

882
0
SHARE
Ad

புதுடில்லி – நாளை சனிக்கிழமை (பிப்ரவரி 8) டெல்லி சட்டமன்றத்திற்கு நடைபெறவிருக்கும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அரசியல் பரபரப்புக்கு வித்திடுவதாகவும் அமைந்திருக்கிறது.

தலைநகர் புதுடில்லியை உள்ளடக்கிய டெல்லி சட்டமன்றத்தை கடந்த இரண்டு தவணைகளாக வென்று வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் (படம்) தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வென்று சாதனை படைக்க முடியுமா என அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆனால், மீண்டும் ஆம் ஆத்மி கட்சிதான் டில்லி சட்டமன்றத்தை வெல்லும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

70 தொகுதிகள் அடங்கிய டெல்லி சட்டமன்றத்தைக் கைப்பற்ற ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் மோதுகின்றன. நாளை சனிக்கிழமை ஒரே கட்டமாக ஒரே நாளில் வாக்களிப்பு நடைபெறுகிறது.

14.6 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட டெல்லி மாநிலத்திற்கான வாக்களிப்பு நாளை முடிவடைந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.