Home One Line P1 செல்லியலின் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்

செல்லியலின் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகள்

999
0
SHARE
Ad

மலேசியாவில் வாழும் இந்துப் பெருமக்கள் ஆண்டுக்கொரு முறை முருகப் பெருமான் மீதான பக்தியின் பெருமையையும், விரிவையும் உலகுக்கு எடுத்துக் காட்டும் வண்ணம் கொண்டாடும் திருவிழா தைப்பூசம்.

மலேசியாவின் முக்கிய நகர்களில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் ஆலயங்களில் எல்லாம் இலட்சக்கணக்கில் மக்கள் திரள்வதும், அங்கு அழகான காவடிகளின் அணிவகுப்பும், ‘வேல் வேல்’ என்ற முழக்கங்களின் எதிரொலிப்பும் உலகையே ஈர்த்துள்ள நமது நாட்டின் சிறப்புகளில் ஒன்று.

காவடிகள் எடுத்து முருகப் பெருமானுக்கு தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தியும், ஆலயங்களுக்குச் சென்றும் தைப்பூசத் திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான எங்களின் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.