Home One Line P1 சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத் திருவிழாவில் விக்னேஸ்வரன்

சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத் திருவிழாவில் விக்னேஸ்வரன்

935
0
SHARE
Ad

சுங்கை சிப்புட் – ஆண்டுதோறும் பத்துமலை, பினாங்கு, சுங்கைப் பட்டாணி போன்ற நகர்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாக்களில் மஇகா தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால், அந்த வழக்கத்திலிருந்து ஒரு மாற்றமாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இவ்வாண்டு சுங்கை சிப்புட்டிலுள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தேவஸ்தான பரிபாலன சபாவின் கீழ் செயல்படும் இந்த ஆலயத் தைப்பூசத்தில் கலந்து கொண்டதோடு, அந்த ஆலயத்தின் நிர்வாகிகளோடு கலந்துரையாடி ஆலயத்தின் நிலவரங்களைத் தெரிந்து கொண்டார்.

தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்களோடும் விக்னேஸ்வரன் அளவளாவினார்.

#TamilSchoolmychoice

விக்னேஸ்வரனுக்கு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் சிறப்பும் செய்யப்பட்டது.

இதற்கிடையில் மஇகா சுங்கை சிப்புட் தொகுதியின் சார்பில் தண்ணீர்ப் பந்தல் தைப்பூசத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்தது. மஇகா சுங்கை சிப்புட் தொகுதியின் சார்பில் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. அந்த மருத்துவ முகாமிற்கும் வருகை தந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சேவையாளர்களையும் விக்னேஸ்வரன் ஊக்குவித்தார்.

மஇகா தலைமைத்துவம் இந்த முறை கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் உத்தேச நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அந்தத் தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களையும் நியமித்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

அந்த வகையில் சுங்கை சிப்புட் தொகுதிக்குப் பொறுப்பாளராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்ரீ மகா சுவர்ண காளீஸ்வரர் ஆலயத்திற்கும் விக்னேஸ்வரன் வருகை

சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத் தைப்பூசத் திருவிழாவிற்கு வருகை தந்த அதே நாளில் (பிப்ரவரி 8) சுங்கை சிப்புட்டிலுள்ள ஸ்ரீ சுவர்ண காளீஸ்வரர் ஆலயத்திற்கும் வருகை தந்த விக்னேஸ்வரன் அங்கு நடைபெறும் ஆலய நிர்மாணிப்புப் பணிகளைப் பார்வையிட்டார்.