Home One Line P2 கொரொனாவைரஸ்: கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது!

கொரொனாவைரஸ்: கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ளது!

540
0
SHARE
Ad

ஜெனீவா: கொரொனாவைரஸின் அதிகாரப்பூர்வ பெயர் கொவிட்-19 (COVID-19) என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

உலக விலங்குகள் சுகாதார நிறுவனம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி இந்த பெயர் வழங்கப்பட்டதாக அதன் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்தார்.

இப்புதிய பெயர் குறிப்பிட்ட புவியியல் இடங்கள், விலங்குகள், தனிநபர்கள் அல்லது உலகின் எந்தவொரு கலாச்சாரக் குழுவையும் குறிக்கவில்லை.

#TamilSchoolmychoice

“புவியியல் இருப்பிடம், விலங்குகள், தனிநபர்கள் அல்லது எந்தவொரு கலாச்சாரக் குழுவுடனும் எந்த தொடர்பும் இல்லாத பொருத்தமான பெயரை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.”

“இது குறிப்பிடுவதற்கு எளிதானதாகவும், இந்த கிருமி பரப்புக்கு ஏற்றவாறும் இருக்க வேண்டும். பிற பெயர்களைப் பயன்படுத்துவதையும், களங்கம் ஏற்படுவதையும் தவிர்க்க ஒரு முறையான பெயரைக் கொண்டிருப்பது முக்கியம்.”

“இது எதிர்காலத்தில் பயன்படுத்த ஒரு நிலையான வடிவமைப்பையும் வழங்குகிறது,” என்று அவர் செவ்வாயன்று ஜெனீவாவில் கொரொனாவைரஸ் பாதிப்பு குறித்து தினசரி ஊடக மாநாட்டில் கூறினார்.

இதற்கிடையில், டெட்ரோஸ் ஐக்கிய நாடுகளின் நெருக்கடி மேலாண்மை குழுவை (ஐநா) செயல்படுத்தியதாகவும் அறிவித்தார்.

“இந்த குழுவை டாக்டர் மைக் ரியான் வழிநடத்துவார், அவர் உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த உதவுவார்”

“கொவிட்-19-இன் சமூக, பொருளாதார மற்றும் தற்போதைய வளர்ச்சி தாக்கங்களுக்கு உதவ மற்ற முகவர் நிறுவனங்கள் தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தலாம்” என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், டெட்ரோஸ் முழு உலகமும் இந்த கிருமி தொடர்பாக இன்னும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் எச்சரித்தார்.