Home One Line P1 ஊழலை வெளிப்படுத்தியதற்காக 69 விழுக்காட்டினர் வேலை இழந்துள்ளனர்!

ஊழலை வெளிப்படுத்தியதற்காக 69 விழுக்காட்டினர் வேலை இழந்துள்ளனர்!

514
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அறுபத்து ஒன்பது விழுக்காட்டு ஊழல் சம்பந்தமான தகவல்கள் வழங்குனர்கள் அல்லது தவறான நடத்தைகளை வெளிப்படுத்தியவர்கள், தங்கள் வருமான ஆதாரத்தை இழந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக முன்னாள் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் மலேசியாவின் தலைவர் டத்தோஸ்ரீ சாடார் பிரஸ் தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள ஊழல் தடுப்பு அமைப்புகளுக்கு உதவி வழங்க, கடந்த செவ்வாயன்று தொடங்கப்பட்ட பெர்டானா இண்டர்நேஷனல் அண்டி கொரப்ஷன் சாம்பியன் பாவ்ண்டெஷன் (பிஐஏசிசிஎப்) போன்ற முயற்சிகள் தேவை என்று அவர் கூறினார்.

“சில தகவலறிந்தவர்கள் கொல்லப்பட்டனர், சிலர் அமிலத்தால் தாக்கப்பட்டனர், சிலர் வேலைகளை இழந்தனர்.”

#TamilSchoolmychoice

“ஓர் ஆய்வின்படி, 69 விழுக்காடு தகவலறிந்தவர்கள் தங்கள் வருமான ஆதாரத்தை இழந்துவிட்டனர், எனவே இந்த வகையான நிதி அவர்களுக்கு முக்கியமானது என்று நான் உணர்கிறேன்” என்று நேற்று இரவு அஸ்ட்ரோ அவானியில் அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் துன் மகாதீர் முகமட் பெர்டானா இண்டர்நேஷனல் அண்டி கொரப்ஷன் சாம்பியன் பாவ்ண்டெஷன் அமைப்பை தொடக்கி வைத்தார். இது கடமையின் போது பாதிக்கப்பட்ட ஊழல் தடுப்பு அமைப்புகளின் அதிகாரிகளுக்கு ஓர் ஆதரவு அமைப்பாக செயல்படுகிறது.