Home One Line P1 சாஹிட் ஹமீடி: அகால்புடி அறக்கட்டளை நிறுவப்பட்டதிலிருந்து ஆண்டு கூட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை!

சாஹிட் ஹமீடி: அகால்புடி அறக்கட்டளை நிறுவப்பட்டதிலிருந்து ஆண்டு கூட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை!

583
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடிக்குச் சொந்தமான அகால்புடி அறக்கட்டளை 1997-ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து மலேசிய நிறுவனங்கள் ஆணையத்திடம் (எஸ்எஸ்எம்) ஆண்டு கூட்ட அறிக்கைகள் (ஏஜிஎம்கள்) மற்றும் ஆண்டு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்யவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

அகால்புடி அறக்கட்டளை நிறுவனத்தின் செயலாளர் மஹிந்தர் கவுர் தேஜா சிங், 64 கூறுகையில், அகால்புடி அறக்கட்டளை ஆவணத்தை புதுப்பிக்குமாறு அகமட் சாஹிட் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

ஆரம்பத்திலிருந்தே அந்நிறுவனம் அவ்வாறு செய்யாததை சாஹிட் அறிந்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

சாட்சி அறிக்கையைப் படித்த மஹிந்தர், அகால்புடி அறக்கட்டளையின் ஆவணங்களை புதுப்பிக்க முடியாமல் போனதற்கு தம்மிடம் முழுமையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

1989-இல் அகமட் சாஹிட்டை சந்தித்ததாகவும், 1993-ஆம் ஆண்டில் சாஹிட்டுக்குச் சொந்தமான மேசுர்மேன் செண்டெரியான் பெர்ஹாட்டில் செயலாளராக இணைந்ததாகக் கூறினார்.

“200-இல் அகமட் சாஹிட் என்னிடம் அகால்புடி அறக்கட்டளை ஆவணத்தைப் புதுப்பிக்கச் சொன்னார். 2003 முதல் 2011 வரை அகால்புடி அறக்கட்டளையின் ஆவணங்களை என்னால் புதுப்பிக்க முடியவில்லை, ஏனெனில் என்னிடம் முழுமையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை, ”என்று அகமட் சாஹிட்டின் 47 குற்றச்சாட்டு விசாரணையின் 14-வது நாளில் அவர் கூறினார்.

புதுப்பிப்புகளுக்காக எஸ்எஸ்எம்மில் ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னாள் துணை பிரதமருக்கு பலமுறை தெரிவித்ததாக மஹிந்தர் கூறினார்.

“அவர் (அகமட் சாஹிட்) இந்த நோக்கத்திற்காக ஆவணத்தை வழங்குவார் என்று தெரிவித்தார், ஆனால் அகால்புடி அறக்கட்டளை ஆவணத்தை இதுவரை நான் பெறவில்லை” என்று துணை அரசு வழக்கறிஞர் லீ கெங் பாட்டின் ஆரம்ப பரிசோதனையின் போது அவர் கூறினார்.