Home One Line P1 ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜேபிஜே சம்பந்தப்பட்ட அமலாக்கத் துறையிடம் புகார் அளிக்கும்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜேபிஜே சம்பந்தப்பட்ட அமலாக்கத் துறையிடம் புகார் அளிக்கும்!

625
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை மலேசியாகினியில் சிறப்பு செய்தி அங்கத்தில் வெளிவந்த கட்டுரைத் தொடர்பாக போக்குவரத்துத் துறை சம்பந்தப்பட்ட அமலாக்கத் துறையிடம் அது குறித்த அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்துள்ளது.

பல மாநிலங்களில் ஜேபிஜே உறுப்பினர்களிடையே ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகக் குற்றம் தொடர்பான நடவடிக்கையால் தளவாடத் துறை பாதிக்கப்படுகிறது எனும் அந்த கட்டுரைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அக்கட்டுரையில் கூறப்பட்ட அறிக்கையை அது தீவிரமாக எடுத்துக் கொள்வதாக ஜேபிஜே ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“ஜேபிஜே இந்த துறையில் எந்தவொரு ஊழலையும் அல்லது அதிகார துஷ்பிரயோகத்தையும் சமரசம் செய்யாது, ஒழுங்கு நடவடிக்கை குற்றம் நிரூபிக்கப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, தூய்மையான மலேசியாவின் எண்ணத்திற்கு ஏற்ப இந்தத் துறையில் ஊழலை எதிர்ப்பதில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் ஜேபிஜே எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.