குறுஞ்செய்தி பயன்பாடான இது, கடந்த 2009-இல் நிறுவப்பட்டது. 2014-ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் இந்த பயன்பாட்டை கையகப்படுத்தியது.
இந்த ஒப்பந்தம் 19 பில்லியன் டாலர் மதிப்புடையதாகும். இன்றுவரை சமூக ஊடக நிறுவனத்தால் பெறப்பட்ட மிகப்பெரிய கையகப்படுத்தல் இது என கருதப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 500 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை வாட்சாப் பெற்றுள்ளது.
ஆயினும், ஒரு சில பாதுகாப்பு காரணங்களுக்காக உலகம் முழுவதும் பின்னடைவை வாட்சாப் ஏற்படுத்தியுள்ளது.
எந்தவொரு உள்நாட்டு செய்தி பயன்பாடுகளையும் விட வாட்சாப்பில் அதிக பயனர்கள் உள்ள இந்தியாவில், மறைகுறியாக்கப்பட்ட தரவை அணுகுவதற்கான விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் கோரியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளும் இதே போன்ற சட்டத்தைக் கொண்டு வர அந்நிறுவனத்துடன் விவாதித்து வருகின்றன.