Home One Line P2 ஹபீஸ் சாயிட் போன்று அனைத்து தீவிரவாதிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும், பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை!

ஹபீஸ் சாயிட் போன்று அனைத்து தீவிரவாதிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும், பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை!

764
0
SHARE
Ad
படம்: தீவிரவாதி ஹபீஸ் சாயீட்

புது டில்லி: தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டியது தொடர்பான வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சாயீட்டுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மும்பையில் நடந்த தாக்குதலுக்கு மூளையாகவும் இவன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஐநா பாதுகாப்பு குழு ஹபீஸ் சாயீட்டை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்தது.

பாகிஸ்தானில் மட்டும் அவருக்கு 23 தீவிரவாத வழக்குகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, அந்நாட்டில் இம்மாதிரியாக செயல்படும் அனைத்து தீவிரவாத தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கும் தண்டனை கிடைப்பதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.