Home இந்தியா பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள 341 திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை கருத்துகள்

பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள 341 திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை கருத்துகள்

790
0
SHARE
Ad

sithambaramமும்பை, ஏப்ரல் 9- நாடு முழுவதும் மொத்தம் 341 திட்டங்கள் ஏதாவது காரணங்களால் முடங்கி கிடக்கின்றன. தடை களை அகற்றி, இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தெரிவித்தார்.

மும்பையில் வங்கி உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களுடன் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் 126 புதிய தொழில் திட்டங்கள் உள்பட மொத்தம் 341 திட்டங்கள் ஏதாவது சில காரணங்களால் முடங்கி கிடக்கின்றன.

#TamilSchoolmychoice

நில ஆர்ஜிதம், காஸ் அல்லது நிலக்கரி உள்ளிட்ட எரிபொருள் தேவை, சுற்றுச்சூழல் பிரச்னை, வனத்துறை அனுமதி போன்ற காரணங்களால் 215 திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. 126 புதிய திட்டங்களில் வங்கிகள் கடன் அளித்தும் சில காரணங்களால் துவங்கப்படாமல் உள்ளன.

இது தொடர்பாக, வங்கி அதிகாரிகளுடனும், தொழில் துறையினருடனும் விவாதித்து வருகிறோம். ஒவ்வொரு திட்டமாக ஆராய்ந்து, தடைகளுக்கான காரணங்களை அறிந்து வருகிறோம். அனைத்து தடைகளையும் அகற்றி, திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசின் பல்வேறு துறைகளில் அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் பெரிய திட்டங்கள் காலதாமதமாகி வருவதை தடுக்க பிரதமர் தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இம்மாதத்தில் கூடி, 31 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை ஆராய்ந்து முடிவெடுக்க உள்ளது. இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.